internet

img

குழந்தைகள் வீட்டிற்குள் பொழுதைக் கழிக்க பயனுள்ள வழிகள்

கொரோனா தொற்று நோய் காரணமாக வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் நமக்கு, இந்த நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட பல வழிகள் உள்ளன. நேரமில்லையென்று வாசிக்காமல் விட்ட  புத்தகங்களை வாசிக்கலாம், புதிய நுட்பங்களைக் கற்கலாம், குழந்தைகளின் கனவுகளை அறியலாம், நம்முடைய கதைகளைப் பேசலாம், உணர்வுகளைப் பகிரலாம் இன்னும் இன்னும் கற்றுக்கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் நிறைய விஷயங்கள் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே நிறைய இருக்கின்றன.
இன்றைய நிலையில் வெளியுலகுடன் உங்களைத் தொடர்பில் வைத்திருப்பது பெரும்பாலும் தொலைக்காட்சியும், இணையமும்தான்.  உங்கள் வீட்டில் தொலைக்காட்சியைத் தவிர்த்து கணினி, லேப்டாப், டேப்ளட், மொபைல் போன்ற டிஜிட்டல் பொருட்களில் ஏதாவது ஒன்றாவது இருக்கும். அதில் இதுவரை நீங்கள் பயன்படுத்திவந்த வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஜிமெயில், யூடியுப் போன்ற பயன்பாடுகளைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான வேறு ஏதேனும் இணையதளங்களையோ, செயலிகளையோ பயன்படுத்தியிருக்கிறீர்களா? அப்படி ஒரு பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் கீழ்க்கண்டவை நிச்சயம் இடம்பெறும்.

டியோலிங்கோ கிட்ஸ் (Tiny Cards)
ஆன்லைன் இணையதளம் வழியாக உலக மொழிகளைக் கற்றுக் கொள்ள உதவும் பிரபலமான டியோலிங்கோ இணையதளத்தின் குழந்தைகளுக்கான செயலி இது. புதிய மொழிகளைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க இச்செயலி உதவுகிறது. எழுத்துக்கள் , சொற்களை கார்டு வடிவில் கற்றுக் கொடுக்கும் இச்செயலி உங்கள் உச்சரிப்பைக் கேட்டு தனித்துவத் தன்மையுடன் கற்றலில் இனிமையைத் தருகிறது.  https://play.google.com/store/apps/details?id=com.duolingo.tinycards&hl=en=com.duolingo.tinycards&hl=en

கணக்கு விளையாட்டு (Math games)
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை 10க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் வழியாக கற்றுத் தருகிறது இந்த ஆப். தினசரி பயிற்சி, மூளைக் கூர்மைத் திறன் எனப் பலவிஷயங்களிலும் இதன் தயாரிப்பாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.  இந்த ஆப் டவுன்லோட் செய்ய :https://play.google.com/store/apps/details?id=com.agandeev.mathgames.free

முடிவில்லா வார்த்தைகள் (Endless Alphabet)
எண்ட்லெட் அல்ஃபாபெட் என்ற இந்த ஆப் குழந்தைகளின் ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொள்ளும் திறனை மேம்படுத்த உதவுகிறது. அனிமேஷன் படங்கள், ஓவியங்கள் வழியாக எளிமையாகப் புரியும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.
https://play.google.com/store/apps/details?id=com.originatorkids.EndlessAlphabet

நேஷனல் ஜியோகிராபிக் கிட்ஸ்  (National Geographic Kids)
தொலைக்காட்சியில் காண்பதைப் போலல்லாமல் குழந்தைகளுக்கு ஏற்ப விளையாட்டுக்கள், வீடியோக்கள் மூலம் பிடித்தமான விலங்குகளைப் பற்றியும், அவற்றின் வாழ்க்கை குறித்தும் அறிந்து கொள்ள உதவுகிறது. குழந்தைகள் விரும்பும்  இணையதளம்  இது.  https://kids.nationalgeographic.com/

காகித சித்திரக் கலை (Origami)
குழந்தைகள் மொபைல் சாதனங்களிலிருந்து தங்கள் கவனத்தை திசை திருப்ப இந்த ஆப் உதவும். ஆம், இதில் உள்ள ஓரிகாமி வடிவங்களை உருவாக்கக் கற்றுக் கொண்டால் மொபைலிலிருந்து விலகி சிறிது நேரத்தை கற்பனைத்திறனுக்கும், கைகளுக்கும் வேலையாகக் கொடுக்க முடியும்.  குழந்தைகளுடன் பெற்றோரும் இணைந்து இதில் காட்டப்படும் வடிவங்களை உருவாக்கி பொழுதை உற்சாகத்துடன் கழிக்கலாம். இந்த செயலியை டவுன்லோட் செய்ய https://play.google.com/store/apps/details?id=com.mobilicos.howtomakeorigami&hl=en_IN

7 நிமிட உடற்பயிற்சி (7 Minute Workout)
வீட்டில் அடைந்துகிடக்கும் இந்த நேரத்தில் மனமும் உடலும் சோர்வின்றி ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டியது அவசியமாகும். அந்தவகையில் வீட்டிற்குள் இருந்தே எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்து கொள்ள இந்த ஆப் உதவுகிறது. ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய பயிற்சிகளை அந்த ஆப்பிள் காட்டப்படும் நேர அளவுடன் இணைந்து செய்து வர உங்கள் தினசரி மற்றும் வாராந்திர பயிற்சி விபரங்களைப்  பட்டியலிட்டுக் காட்டும்.  இந்த ஆப்பை கூகுள் பிளேஸ்டோரில் டவுன்லோட் செய்ய:  https://play.google.com/store/apps/details?id=com.popularapp.sevenmins&hl=en_US
 

;